Type Here to Get Search Results !

ஆந்திராவில் கொடிநாட்ட விரும்பும் விஜய்யின் தங்கைகள்





விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தபோதும் அந்த படம் ஓடாததால் தமிழில் தொடர்ந்து அவருக்கு ஹீரோயினி வேடங்கள் கொடுக்கவில்லை. அதனால் கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக முக்கிய வேடத்தில் நடித்தார் நிவேதா. இந்த நிலையில், தெலுங்கிற்கு சென்ற நிவேதாவுக்கு நானியுடன் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான அப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. விளைவு, புதிய படங்களுக்காக சில டைரக்டர்களும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். அதனால் தெலுங்கில் கவனத்தை திருப்பியிருக்கிறார் நிவேதா தாமஸ். இந்த நிலையில், கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த அனுகிருஷ்ணாவின் கவனமும் இபபோது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. அந்த படத்தில் நடித்த பிறகு சில படங்களில் அவர் நாயகியாக நடித்தபோதும் அப்படங்கள் வெளிவராமல் கிடக்கின்றன. அதனால் நிவேதா தாமஸைப்போன்று தானும் தெலுங்கு படவேட்டையில் இறங்கி, ஆந்திராவில் மார்க்கெட்டை பிடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம். அதோடு, தமிழில் கோடு போட்டு நடித்து வரும் அனுகிருஷ்ணா தெலுங்கில் ஓரளவு கிளாமர் கொடியேற்றவும் முடிவு செய்திருக்கிறாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad