Type Here to Get Search Results !

பேரரசு படத்துக்கு கிடைத்த அழுகிய தேங்காய் விருது


.

வருடந்தோறும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்காக எல்லா மொழிகளிலும் பலவகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன... ஆனால் கேரளாவில் வருடந்தோறும் மிக மோசமான பங்களிப்பை தந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருது அறிவித்து வருகிறது யூ டியூப் சேனல் ஒன்று.. ராட்டன் கோகனட் அவார்டு எனப்படும்  அழுகிய தேங்காய் விருது என்கிற பெயரில் வழங்கப்படும் இந்த விருதுகள் அறிவிக்கப்படுமே தவிர, சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மலையாள திரையுலகத்தினருக்கு மட்டும் அறிவிக்கப்படும் இந்த விருதில் கடந்த 2015க்கான விருது பட்டியலில் நம்ம ஊர் இயக்குனர் பேரரசுவையும் சேர்த்து கலாய்த்து இருக்கிறார்கள். இந்த மோசமான விருது பட்டியலில் கடந்த வருடத்தின் மிகசிறந்த மோசமான இரண்டாம் பாகம் விருது சாம்ராஜ்யம்-2  படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. உன்னிமுகுந்தன் நடித்த இந்தப்படம் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் சாம்ராஜ்யம்-2  என்கிற பெயரில் வெளியானது.. பல வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான  சாம்ராஜ்யம்படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லிக்கொண்டு வெளியான இந்தப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் பேரரசு.இந்தப்படத்தை பற்றியும் இயக்குனர் பேரரசு பற்றியும் இந்த விருது நிகழ்வை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியான லட்சுமி மேனன் என்பவர் குறிப்பிடுகையில், “ஏற்கனவே தமிழ்நாட்டவர்கள் நமக்கு பச்சை காய்கறிகளை அனுப்புவதில் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். அடுத்ததாக முல்லை பெரியாறு விவகாரத்தில் கலாட்டா பண்ணுகிறார்கள். இதோ இப்போது பேரரசு என்கிற இயக்குனரை மலையாள சினிமாவிற்கு அனுப்பி வைத்து மூன்றாவது அட்டாக்கை தொடங்கியிருக்கிறார்கள்” என கிண்டலாக குறிப்பிட்டார். நம்ம ஊர் இயக்குனரை கிண்டலடித்து விருது தந்துள்ளார்கள் என கொதித்து பொங்கி எழுவதா, இல்லை உள்ளூர் ரசிகர்களை சோதித்தது போதாது என மலையாள சினிமாவையும் ஒரு கை பார்த்துவிட துணிந்த பேரரசுவை நொந்துகொள்வதா என்றுதான் தெரியவில்லை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad