Type Here to Get Search Results !

ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த குமார் சங்கக்காரா




இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாட்சில் நடந்து வருகிறது.  இந்த தொடரில் ஏற்கனவே 2 வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இந்த ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் எடுத்துள்ளது.  இந்த முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜெனி பேஸ்டோவுக்கு டல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு கோரப்பட்டது.  ஆனால் நடுவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க, இலங்கை அணியால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மீள் பரிசோதனையின் போதும் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை.  நடுவரின் தீர்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தலைதப்பிய இங்கிலாந்து வீரர் ஜெனி பேஸ்டோவ் 167 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்நிலையில் நடுவரின் தீர்ப்புக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  அம்பயர் கால் எனப்படும் முறை நல்ல முடிவை கூட உபயோகமற்றதாக ஆக்கிவிடுவதாக கூறியுள்ள சங்கக்காரா, விக்கெட்டில் பந்து படுவது மீள் பரிசோதனையின் போது தெளிவாக தெரியும் போது நடுவரின் தீர்ப்பு தேவையில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 95.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad