Type Here to Get Search Results !

ராகுல் ட்ராவிடை புகழும் ரஹானே





மிகுந்த உறுதியுடன் விளையாடுவதற்கும், தேவையான விஷயங்களை பேசுவதற்கும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என ரஹானே கூறியுள்ளார்.  மேற்கிந்திய தீவில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வருகிய ஜூலை மாதம் 6 ஆம் தேதி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.  தற்போது விளையாடவிருக்கும் இந்திய அணியின் துணைத்தலைவராக இருக்கும் ரஹானே இதுகுறித்து கூறியதாவது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் நான் தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.  நான் சந்தித்த சவால்கள் மட்டுமின்றி, என்னை வழிநடத்திய ராகுல் டிராவிட்டும் இதற்கு ஒரு காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் முக்கிய வீரராக இருந்த இவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.  அவர் எப்போதும் கூறுவார், உன்னுடைய மனதில் எதனை யோசிக்கிறாயோ, அதனை வெளிப்படுத்த வேண்டும், அப்போதுதான் நமது திறமைகள் வெளிப்படும், அதுமட்டுமின்றி நமது மனமும் அமைதியடையும்.  நிறைய விஷயங்களை யோசிப்பதன் மூலம், நம்மால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என கூறுவார்.  அதிக நம்பிக்கை அளிப்பார், அவரிடம் இருந்து தான் ஒரு அணியை நிர்வகிக்கும் திறமையை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad