Type Here to Get Search Results !

சச்சின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்






இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலாஸ்டர் குக் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.  அலாஸ்டர் குக் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.  இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  சச்சின்10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த போது அவரின் வயது 31 ஆண்டுகள், 10 மாதம் மற்றும் 20 நாட்கள் ஆகும். அதே சமயம் குக் இன்று 10 ஆயிரம் ரன்களை கடந்த போது அவருக்கு வயது 31 ஆண்டுகள், 5 மாதம் ஆகும்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், டிராவிட், சங்கக்காரா, லாரா, சந்தர்பால் போன்றோர் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.  ஆனால், இங்கிலாந்து வீரர்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியது கிடையாது.  அலாஸ்டர் குக் 10 ஆயிரம் ரன்கள் குவித்து அந்த ஏக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad