Type Here to Get Search Results !

டிவில்லியர்ஸ் மனைவியுடன் மேடையில் அசத்திய ஷேன் வாட்சன்




ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷேன் வாட்சன் போட்டிகளின் போது முக்கியமான நேரத்தில் களமிறங்கி அசத்துவார் என்பது அனைவருக்கும் தெரியும்.  அதே சமயம் அவ்வப்போது கிடைக்கும் மேடைகளிலும் அவர் கிட்டாரில் பாட்டுபாடி அசத்தி வருகிறார்.  கடந்த 2014ம் ஆண்டு அபுதாபியில் நடந்த ஐபிஎல் தொடக்க விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றிய அவர் மேடையில் பாட்டுப் பாடி அசத்தினார்.  இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் வாட்சன் மேடையில் பிரபல ஆங்கில பாடல் ஒன்றை பாடினார். அவருடன் டிவில்லியர்சின் மனைவியும் இணைந்து கொண்டு அந்த பாடலைபாடி அசத்தினார்.  இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவில்லியர்ஸ், "குட்டி டிவில்லியர்ஸ் தனது அம்மாவின் மேடை பங்கேற்பை முதல்முறை பார்க்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad