Type Here to Get Search Results !

ஷரபோவாவை பாராட்டிய செரீனா வில்லியம்ஸ்




ஊக்கமருந்து பயன்படுத்திய தவறை ஒப்புக்கொண்ட மரிய ஷரபோவாவை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பாராட்டியுள்ளார். மரியா ஷரபோவா, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.  அப்போது அவர் ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.  கடந்த ஜனவரி மாதம் அந்த மருந்து தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதை கவனிக்காமல் அதை உட்கொண்டதாக விளக்கம் அளித்தார்.  இது பற்றி ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், ‘ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது அனைவருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் அளித்தது.  ஆனால் தவறுக்கு தானே முழுப்பொறுப்பு என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அவரது மனதைரியத்தை வெளிப்படுத்தியது. அவரது நேர்மையை கண்டு மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad