Type Here to Get Search Results !

இது பாக்ஸிங் பேய் படங்கள் ஸ்பெஷல்



தமிழ் சினிமா தற்போது வட இந்திய படங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களை விட சிறந்த கலைஞர்கள் இங்கு தான் உள்ளனர், பாலிவுட்டிலேயே தென்னிந்திய கலைஞர்களை பெரிதும் விரும்புகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, அவ்வபோது தமிழ் சினிமா கையில் ஒரு சில கதைக்களங்கள் சிக்கிக்கொள்ளும், அந்த மாதிரியான கதைகளின் தொடர் வெற்றி, அதே கதைகளில் பல படங்கள் வரும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை பிடித்துள்ளது பாக்ஸிங் பேய்.ஆமாம், முனி என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்து வைத்த பேய் ட்ரண்ட், பிறகு தமிழ் சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கியது, தொடர்ந்து காஞ்சனா, அரண்மனை, காஞ்சனா-2, மாயா, மாஸ், டிமாண்டி காலனி, யாமிருக்க பயமே என பல படங்கள் வரிசை கட்டியது.இதில் காஞ்சனா-2 ரூ 100 கோடி, அரண்மனை ரூ 40 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. பேய் படங்களுக்கு என சில டெம்ப்ளேட் கதைகள் இருக்கும், பழி வாங்குதல் குடும்பம், நண்பர் என கொலை செய்தவர்களை பழி வாங்கும் சாதாரண கதை தான் என்றாலும், அதில் காமெடி, ஆக்‌ஷன் என லேசாக தூவி எளிதில் ஹிட் அடித்து விடலாம்.இதுவரை வந்த பேய் படங்களில் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம் என்றால், மாயா, டிமாண்டி காலனி தான், இதில் மாயாவும் பழி வாங்கும் கதை தான் என்றாலும், புதுவிதமான திரைக்கதையில் இதுவரை தமிழ் சினிமா பயணிக்காத ஒரு ஜேனரில்(Genre) கலக்கியது.அதேபோல் டிமாண்டி காலனியும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாட்டிக்கொள்ளும் 4 இளைஞர்கள், பேயிடம் இருந்து தப்பித்துக்கொள்ளாமல் மரணம் அடைவது என புதுவிதமான ட்ரண்டை உருவாக்கியது. நேற்று வெளியான அரண்மனை-2 கூட ஒரே மாதிரி தான் உள்ளது என்றாலும், பொழுதுபோக்கை மட்டும் விரும்பும் ரசிகர்களுக்கு இது செம்ம விருந்து தான்.அதேபோல் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது, அதிலும் பாக்ஸிங் என்றால், நம் இந்தியர்களுக்கும் பெரிதும் தெரியாத விளையாட்டு, இயக்குனர்கள் வைப்பது தான் ரூல்ஸ். ஹீரோ அந்தரத்தில் பறந்து பறந்து கூட பாக்ஸிங் விளையாடுவார்.இதில் பத்ரி, எம்.கும்ரன், வலியவன், பூலோகத்தை தொடர்ந்து தற்போது நேற்று ரிலிஸான இறுதிச்சுற்று வரை பாக்ஸிங் கதைகள் தான். இதில் பத்ரி, எம்.குமரன் எல்லாம் மக்களை பொழுதுபோக்கு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள். பூலோகமும் இந்த வகை என்றாலும், இதில் பாக்ஸிங் நுணுக்கங்கள் குறித்து ஆழமாக காண்பித்திருப்பார்கள்.ஆனால், இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான பாக்ஸிங் படம் தான் இந்த இறுதிச்சுற்று. மிகவும் ரியலாக அதிலும் ஒரு பெண் பாக்ஸிங் குறித்து தைரியமாக ஒரு படத்தை இயக்கி அதை ரசிகர்களை திருப்திப்படுத்தவும் செய்துள்ளார் சுதா. ஹீரோ வெற்றிப்பெற்றே தான் இருப்பார் என்று மட்டுமில்லாமல், ரியல் பாக்ஸிங் இப்படித்தான் இருக்கும், இதற்குள் இத்தனை அரசியல் உள்ளது என்பதை கூறியுள்ளது இறுதிச்சுற்று.ஆனால், கிளைமேக்ஸ் சண்டையில் மட்டும் ஹீரோ 10 அடி வாங்குவார், அவருக்கு பிடித்தவர் வந்த பிறகு தான் அடிக்க ஆரம்பிப்பார் என்ற சேம் லாஜிக் தான் இந்த இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் என்றாலும், அதை ஒரு பெண் வழியாக கூறி புது மேஜிக் படைத்துள்ளது.தற்போது ஒரேநாளின் அரண்மனை-2, இறுதிச்சுற்று என பாக்ஸிங் பேய் வந்துள்ளது. இதில் எந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad