Type Here to Get Search Results !

ஐபிஎல் தொடரில் ராஜ்கோட், புனே அணிகளுக்கு பயிற்சியாளர்கள் யார்




ஐபிஎல் தொடரில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணிகளின் வீரர்கள் வேறு அணிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து புனே, ராஜ்கோட் ஆகிய 2 அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டோனி, அஸ்வின், டூ பிளஸ்சிஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.   இதேபோல் ராஜ்கோட் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, மெக்கல்லம், டுவைன் பிராவோ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதனிடையே இரண்டு புதிய அணிகளும் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ராஜ்கோட் அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட சமயத்தில், கேரி கிறிஸ்டன் அணியின் பயிற்சியாளராக இருக்கலாம் என அவர்களிடம் அணி நிர்வாகம் கூறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரான கிறிஸ்டனின் பயிற்சியின் கீழ்தான், 2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன், சமீபத்தில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  மற்றொரு பக்கம் புனே அணி, நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கை பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. புனே அணிக்கு பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், மீண்டும் ஒரு முறை டோனியுடன் இணைவார். பிளமிங் பயிற்சியின் கீழ், ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டத்தையும், மூன்று முறை ரன்னர் பட்டத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad