Type Here to Get Search Results !

யுவராஜ் சாம்பியன் வீரர் ஹர்பஜன் சிங்



ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள டி20 இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர்  அளித்துள்ள பேட்டி: ஆஸி.யில் சிறப்பாக ஆடுவதன் மூலம் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறும்  வாய்ப்பு உள்ளது. ஆஸி.யில் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பேன். பந்து வீச்சு மட்டுமின்றி 7வது வீரராக களம் இறங்கி, அதிரடியாக  ரன் எடுக்கவும் விரும்புகிறேன். இதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். யுவராஜ், நெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். யுவராஜ் ஒரு சாம்பியன் வீரர். அவரின் ஆட்டத்தினால் 2007 டி20 கோப்பை, 2011ல் 50  ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளோம். அவர் எப்போதும் வலிமையான தூணாக இருந்து வருகிறார். நெஹ்ராவின் அனுபவம் கை கொடுக்கும்,  அவர் 2003, 2011 உலக கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகித்தார். மீண்டும் இரு நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன்  எதிர்பார்த்துள்ளேன். மீண்டும் ஒருமுறை டி20 உலக கோப்பையை இந்தியா செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார். பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் சரண்  தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி கேட்டபோது, ‘‘அவர் தொடர்ச்சியாக 130 கி.மீ. வேகத்தில் பந்து வீசி வருகிறார்.  சிறப்பாக பவுன்சர் செய்கிறார். அருமையாக ஸ்விங் செய்வதால் ஆஸி. மைதானங்களில் அவரால் சாதிக்க முடியும்,’’ என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad