Type Here to Get Search Results !

ஆஸி.யை வீழ்த்த கபிலின் வியூகம்







ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முடிவில் அவர்கள் விக்கெட் இழக்காமல் 40 ரன்கள் என்று இருப்பதை விட 90 ரன்கள் எடுத்தாலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவது அவசியம்.
ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்து வீச்சு உத்தியின் மூலம் ஆஸ்திரேலியாவில் நாம் போட்டிகளை ஒரு போதும் வெல்ல முடியாது. முதல் 15 ஓவர்களில் அவர்களது 3 விக்கெட்டுகளை சாய்த்து விட்டால் அந்த அணியை 280 ரன்களுக்கு கட்டுப்படுத்தலாம், இப்போதெல்லாம் 280 ரன்கள் என்ற இலக்கை துரத்துவது அவ்வளவு கடினமல்ல” என்றார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad