Type Here to Get Search Results !

ஐசிசி விருதுகள்: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் ஸ்டீவன் ஸ்மித்; ஒருநாள் வீரர் டிவில்லியர்ஸ்






நடப்பு ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் சுமித் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்சும், டி20 போட்டிக்கான சிறந்த வீரர் விருது டுபிளசியும் தட்டிச் சென்றுள்ளனர்.

விருதுகள் பட்டியல் விவரம்:-

1) நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது: ஸ்டீவ் சுமித் (அவுஸ்திரேலியா)

2) ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்: டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

3) டி20 போட்டிக்கான சிறந்த வீரர்: டு பிளிஸ்சிஸ் (தென் ஆப்பிரிக்கா)

4) ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் (பெண்கள்): மெக் லன்னிங் (அவுஸ்திரேலியா)

5) டி20 போட்டிக்கான சிறந்த வீரர் (பெண்கள்): ஸ்டபனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்)

6) வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருது: ஜோஸ் ஹாஸ்ல்வுட்(அவுஸ்திரேலியா)

7) கிரிக்கெட்டின் சிறந்த உற்சாக வீரர்: பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

8) கூடுதல் மற்றும் இணைப்பு வீரர் விருது: குர்ரம் கான் (ஐக்கிய அரபு எமிரேட்)

9) சிறந்த நடுவருக்கான விருது: ரிச்சர்டு கெட்டல்போரோப் (இங்கிலாந்து)


           இந்திய வீரர்கள்  யாரும் தேர்வாகவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad