Type Here to Get Search Results !

T20 போட்டியில் அஸ்வின் புதிய சாதனை படைத்தார்







இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த இர்பான் பதானை (28) அஸ்வின் முந்தியுள்ளார். 28 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  மேலும், இரு டி20 போட்டிகளிலுமே அஸ்வின், டிவில்லியர்சை வீழ்த்தினார். மொத்தமாக அவர் டி20 போட்டியில் 5 முறை டிவில்லியர்சை ஆட்டமிழக்க செய்துள்ளார்.  முன்னதாக இலங்கை தொடரில் சங்கக்காராவை அனைத்து இன்னிங்சிலும் வீழ்த்தியிருந்தார்.  அதே போல் கிறிஸ் கெய்லை சில முறைகள் வீழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் டிவில்லியர்ஸ் தற்போது இணைந்துள்ளார்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad