புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்த டோனியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்








இந்திய அணித்தலைவர் டோனி அடிக்கடி தனது தலைமுடியை வித்தியாசமாக மாற்றி அமைத்துக் கொண்டே இருப்பார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று கொல்கத்தாவுக்கு வந்தது.  அப்போது டோனி வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். இருபக்கமும் ஷாட்டாக வெட்டி மேல் பக்கம் மட்டும் முடி வைத்திருந்தார்.  இதை பார்த்த ரசிகர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், இது எல்லாம் தேவையா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.  ஐபிஎல் தொடரில் டோனி இது போன்ற ஹேர்டைலில் களமிறங்கி பட்டையை கிளப்புவார். இதனால் சில ரசிகர்கள் அவரது புதிய ஹேர்ஸ்டைல் அணிக்கு ஆறுதல் வெற்றியை பெற்று தரும் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தரம்சாலா மற்றும் கட்டாக் நகரங்களில் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 3வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )