எனது இதயம் என் வாயில் இருக்கும்: டிவில்லியர்சின் அதிரடி பற்றி கோஹ்லி




தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோஹ்லி கூறியுள்ளார். சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்களில்  வெற்றி பெற்றது. இதற்கு கோஹ்லி விளாசிய 138 ஓட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தது.  இது பற்றி விராட் கோஹ்லி கூறுகையில், "தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினர். பவுண்டரிகளை எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் ஒன்று மற்றும் இரண்டு ரன்களாக  மட்டுமே அதிகமாக எடுக்க முடிந்தது.  மேலும், இலக்கை எட்டும் போது சதம் அடித்து தங்களுடைய அணி வெற்றி பெறுவது மகிழ்ச்சியை தரும். ஏனெனில் அந்தப் போட்டியை வெற்றி பெற்றதில் உங்கள் பங்கு அதிகமாக இருக்கும்.  ஒவ்வொரு சதமும் அற்புதமான விஷயம்  தான். டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்யும்  போது எனது இதயம் என் வாயில் தான் இருக்கும். இதை நானே டிவில்லியர்சிடன் உடைமாற்றும் அறையில் அடிக்கடி சொல்வேன்.  அந்த அளவு அவர் நம்ப முடியாத ஷாட்டுகளை ஆடி அசர வைப்பார். வெற்றிக்காக போராடக் கூடியவர். அவர் அவரையே பாராட்டிக் கொள்ள மாட்டார். அதனால் நான் அவரைப் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url