அனைவரையும் பின்னுக்கு தள்ளி வசூல் ராணியாக மாறிய நயன் தாரா






இந்திய சினிமாவை பொறுத்த வரை இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் ஹீரோக்களுக்கே தான் சொந்தம். ஆனால், ஒரு சில கதாநாயகிகளே ஹீரோக்களையும் தாண்டி திரையில் ரசிகர்களை ஈர்ப்பார்கள்.அந்த வகையில் நடிகை நயன்தாரா கடைசியாக நடித்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் ஆகிய மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார் இவர்.இதில் மாயா படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடி தான் படத்திற்கும் இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைத்தது அவரால் என்றால் மிகையல்ல. மேலும், இவரின் சக நடிகைகளான த்ரிஷா, சமந்தா, தமன்னா என அனைத்து ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார் நயன்தாரா.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url