தோனி சொல்கிறார் : ஆக்ரோஷம் வேண்டும் ஆனால் ஒழுங்கின்மை கூடாது
ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது என்று தோனி கூறியுள்ளார். இதுகுறித்து தோனி கூறுகையில், ஆக்ரோஷம் என்பது சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடல்அளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை திறமையான எதிர்கொண்டு விளையாடுவதுதான் ஆக்ரோஷம் ன்று டிராவிட் சொல்லியிருக்கிறார். ஆகவே, இதுவும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆக்ரோஷத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய வீரர்கள் கற்று கொண்டிருப்பார்கள். இஷாந்த் சர்மாவின் ஆக்ரோஷம் சிறந்ததுதான். ஆனால், அதே சமயம் நான் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்தவொரு இடத்திலும் நாங்கள் ஒழுங்கின்மை நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் வழிமுறை அடிப்படையுடன் ஆக்ரோஷமாக விளையாட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.