Type Here to Get Search Results !

பிஎம்டபிள்யு நிறுவனம் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் X5M மற்றும் X6M எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது







M6 க்ரான் கூபே காரைத் தொடர்ந்து,  X5M மற்றும்  X6M எஸ்யுவி கார்களையும் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது, பிஎம்டபிள்யு நிறுவனம். இவை மெர்சிடீஸ் பென்ஸின் GL63 மற்றும் ML63 AMG எஸ்யுவிகளோடு போட்டி போடுகின்றன. இவ்விரண்டு கார்களும்  CBU ஆக இறக்குமதி செய்யப்படுவதால், இக்கார்களின் விலை 1.5 கோடி-2.0 கோடி ருபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு கார்களும் எஸ்யுவி என்பதால், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கட்டாயம் இருக்கும். தவிர அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட், பெரிய M-spec டிஸ்க் ப்ரேக்ஸ். 21 இன்ச் அலாய் வீல்கள், பெரிய கூலிங் சிஸ்டம், பெரிய ஏர் டேம் உடன் முன்பக்க பம்பர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இக்காரில் 560PS பவர் மற்றும் 69.4kgm அதிகபட்ச டார்க்கை அளிக்கும் 4.4 லிட்டர் V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad