படமாக வெளியாகவிருக்கிறது உலகப் புகழ் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை.

  








 உலக புகழ் பெற்ற போர்த்துகீச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு, மிக விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக பெரிய திரையில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்பு இதே போல் ட்மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோருக்கு சினிமாப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  இப்போது முன்று FIFA விருதுகளை வென்ற ஒரே போர்த்துகீச கால்பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய ரொனால்டோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வீடியோக்கள் என முழுமையான படமாக வெளியாகவிருக்கிறது,அவரது படத்திற்கான 2 நிமிட ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரொனால்டோ தனது வெற்றியின் பின்னணியில் உள்ள தனது பெற்றோர்கள் மற்றும் தனது மகனுடனான தனக்கு இருந்த இறுக்கமான வாழ்கையை பற்றி கூறியுள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளிவர உள்ளது.  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url