Type Here to Get Search Results !

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்- விஷால், கார்த்தியை திட்டிய சேரனை விளாசி எடுத்த இயக்குனர்







நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர். இதில் சேரன் நடிகர்கள் ஜே.கே.ரித்தீஸ், விஷால், கார்த்தியை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.தேர்தலும் பின் அப்படி நான் பேசியதற்காக வருந்துகிறேன் என கூறினார். தற்போது சேரனை கண்டித்து இயக்குனர் தாமிரா சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இதில் இவர் கூறுகையில் ‘சேரன் மீது இன்றளவிலும் எனக்கு எந்த விமர்சனங்களும் இல்லை. ஒரு கதை பிடிக்காமல் நடிகன் மறுப்பது இயல்பு. அதை சேரனே பல இயக்குநர்களிடம் செய்திருக்கக் கூடும். அதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் அப்படிப் பேசினேன் என்பது சிறுபிள்ளைத்தனமான பதில்.நாம் சொன்ன சொல்லுக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். பொதுவெளியில் நாம் மறுக்க இயலாத சொற்களையே சொல்ல வேண்டும்.ஒரு மாபெரும் கலைஞன் தலைகுனிந்து நிற்பது வருத்தமளிக்கிறது சேரன்’ என்று பேசியுள்ளார்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad