ரசிகர்களை மகிழ்விக்க ஒன்று சேர்ந்த தல-தளபதி






தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித்-விஜய் தான்.இவர்கள் இருவரும் நட்பாக இருந்தாலும் ரசிகர்களிடையே தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதல் இருந்து வருகிறது.இவர்கள் இணைந்து திரையில் தோன்றுவார்களா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் தல-தளபதி கெட்டப்பில் வந்த இரண்டு பேர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை ரசிக்க வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமியின் பேரனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url