வேதாளம் டைட்டில் பின்னணி காரணம் தெரிந்தது






தல அஜித் வீரம் சிவாவுடன் மீண்டும் இணைந்துள்ள படம் வேதாளம்.டீசர், பாடல்கள் எண்ணற்ற சாதனை படைத்து வரும் நிலையில் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.இப்படத்தின் தலைப்பு பற்றி ஏகப்பட்ட கதைகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து சிவா விளக்கமளித்துள்ளாராம். அதாவது வீரம் படப்பிடிப்பின் போது இந்த கதையை அஜித்திடம் கூறி உங்க கதாபாத்திரம் வேதாளம் மாதிரி மிகவும் அழுத்தமாக இருக்கும் என்று கூறினாராம்.இதை மனதில் வைத்திருந்த அஜித் இப்படத்தின் தலைப்பு பற்றிய விவாதம் வந்தபோது வேதாளம்னு வைக்கலாம் என தெரிவித்தாராம்.இந்த வேதாளம் கதாபாத்திரம் அஜித்தின் கதாபாத்திரத்தோடு ஒத்துப்போகுமாம்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url