நடிகர் அஜித் உடல்நிலை பற்றி வதந்தி: போலீஸில் புகார் அளிக்க முடிவு!





சென்னை: நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது காவல்துறையினர் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடித்து வரும் படங்கள், படங்களின் பெயர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை சுரேஷ் சந்திரா என்பவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சுரேஷின் ட்விட்டர் தளத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டோ ஷாப் மூலமாக மாற்றி "அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்" என்று மாற்றி வாட்ஸ் அப் மூலமாக சில விஷமிகள் பரப்பினர்.  அந்த புகைப்படம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.  இதனைத் தொடர்ந்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.  மேலும், வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் அஜித் தரப்பில் முடிவு செய்திருக்கிறார்கள்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url