இத்தனை மோசமாக இருப்பார்களா ரசிகர்கள்- விஜய், அஜித் உச்சக்கட்ட கோபம்








தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும், இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் மோதிக்கொண்டே தான் இருப்பார்கள்.அதிலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வார்கள். ஆனால், இத்தனை நடந்தும் இருவரும் அமைதியாக இருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை.இந்த சண்டை சமீப காலமாக உச்சத்தை தொட்டுள்ளது, விஜய் நடித்த புலி படத்தை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்தது புலி படக்குழுவினர்களை மிகவும் கஷ்டப்படுத்தியது.இதற்கெல்லாம் மேலாக, நேற்று ஒரு சிலர் அஜித் உடல் நிலை சரியில்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலி ஐடி ஒன்றி தெரிவித்தனர். இந்த செய்தி அஜித் தரப்பை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. உடனே அஜித் தரப்பில் இருந்து அவர் நலமாக இருக்கிறார், ஏன் இப்படியெல்லாம் மோசமான கருத்துக்களை பரப்புகிறார்கள் என கண்டித்தனர்.ஆனால், இதற்கெல்லாம் ஒரே வழி விஜய்-அஜித் இணைந்து தங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்பது மட்டுமே. செய்வார்களா?



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url