Type Here to Get Search Results !

தாயா? தாரமா??





தாயா? தாரமா??




பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து , இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிக்க தடுமாறும் ஆண்களுக்கு பயன் படக்கூடிய சில டிப்ஸ்.....

அம்மாவிடம்......



உங்கள் தாயின் சமையல் தான் சிறந்தது என்று உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் முன் உயர்த்தி பேசாதிருங்கள். உங்கள் தாயின் மனதை அதை குளிர்விக்கும் அதே நேரத்தில், உங்கள் மனைவியின் மேல் ஒரு இளக்காரமான எண்ணம் உங்கள் தாயின் மனதில் உருவாக்கும்.



தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து             மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் ,  பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள். உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள்   வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை   அவர் உணர்வார், மதிப்பார்.





நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால்,  உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக  வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன்      இணைக்க  முயலுங்கள்அப்போதுதான் தன் மகனுக்கு   தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின்                 மீதிருந்து அகற்ற அது உதவும்.



நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ,
புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன்  தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள். உங்கள்  மனைவியின் மீது மதிப்பையும், நேசத்தையும் அது   ஏற்படுத்தும்.


மனைவியிடம்....


உங்கள் தாய் , உடன் பிறந்தோர் இவர்களைப் பற்றி புகார்  மனுவை உங்கள் மனைவி தனிமையில் உங்களிடம்  தொடுக்கும் நேரத்தில், நிதானத்துடன் அவர் கூறுவதை  கேட்டுக்கொள்ளுங்கள். எதிர்த்து தர்க்கிக்கவோ, " நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப்போ " என்று அதிகாரம் செலுத்தவோ அதுவல்ல தருணம். 


அப்படி நீங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும், உங்கள்  கோபத்தையும் வெளிப்படுத்தினால் அது உங்கள் மனைவியின் உள்ளக் குமறலை அதிகரிக்கும். உங்கள் மனைவியின் மீது தவறு இருந்தாலும், பொறுமையுடன் பிறிதொரு  சந்தர்ப்பத்தில் நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.


மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.


சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களை கண்டிக்கும் வகையில் உங்கள் அம்மா திட்டியது, அடித்தது எல்லாம் உளறிக்கொட்டி உங்கள் மனைவிக்கு உங்கள் தாயின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாதிருங்கள்.





































































































































































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad