பதுங்கும் புலி விஜய் !




                                                 புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயை பாராட்டி, டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்த விஷயம் தான். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, கலங்க அடிக்கிறது. இதுதொடர்பாக பலரும், கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தாலும், இந்த வீடியோ, புலி படத்துக்கு இலவச விளம்பரம் போல் ஆகி விட்டது. மேலும், தன் முந்தைய படங்களை போல், இந்த படத்தின் வெளியீட்டுக்கு எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, அடக்கி வாசிக்கிறது, விஜய் தரப்பு. அரசியல் ரீதியான விஷயங்களை பேசவோ, அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்து வரும் விஜய், சக நட்சத்திரங்களின் திருமண விழாவுக்கு செல்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் திருமணமான, சாந்தனு - கீர்த்தி ஜோடியை, தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து அசத்தியுள்ளார் விஜய்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url