கீரையும் அதன் மருத்துவ குணங்களும்...

கீரையும் அதன் மருத்துவ குணங்களும்...


வெந்தயக்கீரை




வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்ட இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.


முருங்கைக்கீரை




இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

அரைக்கீரை



அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை



உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.


அகத்திக்கீரை



இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது. அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். எனவே அகத்திக்கீரையை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.


மணத்தக்காளி கீரை



இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.


பாலக்கீரை




இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும். இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.


புளிச்சக்கீரை






இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.


பசலைக்கீரை





இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url