Type Here to Get Search Results !

விஜய் படம் வெளியாகிற அதே நாளில் அஜித்பட டீஸர் வெளியாகிறதா ?








நாளை (அக்டோபர் 1 ஆம் தேதி) விஜய் நடித்த புலி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்றிரவு பனிரெண்டுமணிக்கு (கணக்குப்படி அக்டோபர்1 தொடங்கும்நேரம்) அஜித்தின் வேதாளம் படத்தின் டீஸர் எனப்படும் சிறுமுன்னோட்டம் வெளியாகவிருக்கிறது என்று சமுகவலைத்தளங்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.  விஜய் படம் வெளியாகும் நாளில் அஜித் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டால் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 
சமுகவலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கும் இந்தச் செய்தி உண்மைதானா? என்று வேதாளம் படக்குழுவினரிடம் கேட்டபோது, விஜய் படம் வெளியாகிற நாளில் எங்கள் படத்தின் டீஸரை வெளியிடமாட்டோம், அப்படி வெளியிடுவதை அஜித் சாரும் விரும்பமாட்டார் என்று சொல்கிறார்கள். ஆக நாளைக்கு வேதாளம் பட டீஸர் இல்லை. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad