கால்பந்து போட்டியில் வீரர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய நடுவர்!








பிரேசில் நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியின் போது நடுவர் துப்பாக்கியை வைத்து வீரர்களை மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் பேளோ ஹாரிஜொந்தே நகருக்கு அருகே புருமாண்டினோவில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் அமெச்சூர் புருமாண்டினோ- அமண்டஸ் டா போளா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு கேப்ரில் முர்தா என்பவர் நடுவராக இருந்தார்.  இந்நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமண்டஸ் அணி வீரருடன் நடுவருக்கு தகராறு ஏற்பட்டது.  இதனால் கோபமடைந்த நடுவர் முர்தா துப்பாக்கியை எடுத்து அமண்டஸ் அணி வீரரை நோக்கி காட்டி மிரட்டினார்.  மேலும், அந்த வீரரை உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் தாக்கினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அணியின் மேலாளர் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.  நடுவரின் இந்த மோசமான செயலுக்கு அமண்டஸ் அணி கடும் கண்டனம் தெரிவித்தது. விதிமுறையை மீறிநடந்து கொண்ட அந்த நடுவருக்கு எதிராக கால்பந்து சங்கம் சம்மன் அனுப்பியுள்ளது. 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url