மும்பை வெற்றி *கபடி லீக்கில் அசத்தல் !



                                             கபடி லீக் தொடரில் மும்பை அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது. பிரிமியர் தொடர் பாணியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 2வது சீசன் போட்டிகள் நடக்கின்றன. இதில் வழக்கம் போல மும்பை, ஜெய்ப்பூர், பாட்னா, பெங்களூரு உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை அணி, புனே அணியை சந்தித்தது. இதில் 28–21 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜெய்ப்பூர், பெங்களூரூ, பாட்னாவை வீழ்த்திய மும்பை அணி, இத்தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் மும்பை அணி 4 வெற்றியுடன் 20 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10 புள்ளியுடன் (2 வெற்றி) 2வது இடத்தில் உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url