சல்மான் படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிறுமி!



                                           சல்மான்கான் நடிப்பில் வௌியாகி இருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில், சல்லமான் உடன் கரீனா கபூர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்சாலி மல்கோத்ரா என்ற சிறுமி நடித்திருந்தார். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சிறுமி ஹர்சாலி, தன் பெற்றோரை தவற விடுகிறார், அந்த சிறுமியை மீண்டும் சல்மான் கான் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் செல்கிறார், அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை. இந்தப்படத்தில் வாய் பேச முடியாத சிறுமியாக அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார் ஹர்சாலி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் வசூலையும் குவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு சிறுமி ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுப்பற்றி இயக்குநர் கபீர்கான் கூறியதாவது, பஜ்ரங்கி பைஜான் படத்தை பார்த்துவிட்டு இந்த சிறுமி அழுதது மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். படத்தில் ஹர்சாலி வாய் பேச முடியாமல் படும் கஷ்டத்தையும், அவருக்கு சல்மான் உதவுவதை பார்த்து உணர்ச்சி பொங்க அழுது இருக்கிறார் இந்த சிறுமி. மேலும் அந்த சிறுமியின் தாயார் எதற்கு அழுகிறாய் என்று கேட்க... அதற்கு அந்த சிறுமி, சல்மான், சல்மான், ஐ லவ் யூ சல்மான்... என்று அழுத படியே கூறியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )