Type Here to Get Search Results !

ரஜினியின் பாட்ஷா 2-ம் பாகத்தில் அஜீத் !



                                        ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது. நான் ஆட்டோக்காரன் ’தங்கமகன்’, ’ஸ்டைலு ஸ்டைலுதான்’, அழகு அழகு நீ நடந்தால்’, ’ரா... ரா...ரா... ராமையா’ ’பாட்ஷா பாரு’ போன்ற இனிமையான பாடல்கள் இடம் ªபற்று இருந்தன.இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்  போவதாக டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா ஏற்கனவே அறிவித்தார். அதற்கான திரைக்கதையை உருவாக்கி விட்டாராம்.
                  ரஜினி பாட்ஷா 2-ம் பாகத்தில் நடிக்க  மறுத்து விட்டாராம். இதையடுத்து அஜீத்தை அணுகி சுரேஷ்கிருஷ்ணா கதை சொன்னதாகவும் அவருக்கு  கதை பிடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே பாட்ஷா 2-ம் பாகத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜீத் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்ததும் பாட்ஷா 2-ம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

                                        ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக்கில் அஜித் நடித்து அந்த படம் சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடதக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad