Type Here to Get Search Results !

பேசுவதை குறைத்த பவர்ஸ்டார்!




                                                               சில மாதங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான ஆடியோ விழாக்களில் தலைகாட்டி வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படி அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும் ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் பெற்று வந்தார். ஆனால் ஒரு படத்தின் விழாவில், சில சின்ன பட தயாரிப்பாளர்கள் எங்களை படப்பிடிப்புக்கு அழைத்து சென்று நடிக்க வைப்பவர்கள், பின்னர் பேசியபடி சம்பளமே தருவதில்லை. அதனால் பணம் இருக்கும் தயாரிப்பாளர்களை மட்டுமே படமெடுக்க அனுமதி கொடுங்கள் என்று அந்த விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பு சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அதையடுத்து அவர் தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதாக சொல்லி அவருக்கு எதிராக சிலர் அதே மேடையில் முழக்கமிட்டனர். குறிப்பாக, பவர்ஸ்டார் தயாரிப்பாளர்களை தவறாக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எச்சரித்தனர். விளைவு, அதையடுத்து அமைதியாகி விட்ட பவர்ஸ்டார், பின்னர் அதிகப்படியாக ஆடியோ விழாக்களுக்கு வருவதை குறைத்து விட்டார். அப்படியே வந்தாலும், சினிமா பிரச்சினைகளைப்பற்றி எதையும் பேசுவதில்லை. சம்பந்தப்பட்ட படங்களை வாழ்த்தி பேசி விட்டு அமர்ந்து விடுகிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad