Type Here to Get Search Results !

அணிக்கு முன்னேற்றம் தேவை - டோனி ஆதங்கம்




                                           வங்காள தேசத்துக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று தொடரை இழந்து பெரும் அவமானத்தைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கு வங்காளதேசத்தின் சிறப்பான ஆட்டம் காரணமாக கூறப்பட்டாலும்  டோனிக்கு சிக்கலை ஏற்படுததியது. இதை தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு வீரராக செயல்பட தயார் என்று அறிவித்தார். வீரர்களின் மோதல் காரணமாக டோனி இதை வெளிப்படையாக தெரிவித்தார்.

                                          வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

                                         அணியினர் அனைவரும் சேர்ந்து உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளோம். இது மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும் பல விஷயங்களில் நாம் முன்னேற்றத்தை செய்ய வேண்டியுள்ளது.நமக்கு உண்மையிலேயே அதி வேகமான பந்து வீச்சாளர்கள்  தேவையா அல்லது அதி வேகமாக வீசாத பந்து வீச்சாளர்கள்  தேவையா அல்லது சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். வங்கதேச வீரர்கள் நல்ல அணியினர். சிறந்த திறமையுடன் உள்ளனர். நிலைத்து ஆடுகின்றனர். சிறந்த அணிகளில் ஒன்றாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது.ஸ்கோர்போர்டில் ரன் குவிய வேண்டும். அப்போதுதான் அதை டிபன்ட் செய்ய முடியும். அதைத்தான் நாங்கள் இன்று செய்தோம். பந்து வீச்சாளர்களையும் அது இயல்பாக பந்து வீச வைக்கும். அவர்களுக்கு வேலை எளிதாகும் என்று டோனி கூறினார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad