புகையிலை, புகை பிடிப்பவர்களின் நஞ்சினை முறிக்கும் நார்த்தங்காய் .




                                              நார்த்தங்காய் குழம்பு 
                               (Citeron Recipe)

தேவையான பொருள்கள்


  • நார்த்தங்காய் துண்டுகள் ---  1 கப் 
  • பச்சைமிளகாய் ---  8
  • புளி ---  சிறிய எலுமிச்சை அளவு 
  • கடுகு,வெந்தயம்,பெருங்காயம் ---  தலா 1 ஸ்பூன் 
  • நல்லெண்ணெய் ---  2 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள் ---  1/2 ஸ்பூன் 
  • வெல்லம் ---  சிறிய எலுமிச்சை அளவு 
  • எள் ---  2 ஸ்பூன் 
  • உப்பு ---  தேவையானது 

செய்முறை 

        வெறும் வாணலியில் எள் வறுத்து பொடி செய்யவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கின நார்த்தங்காய் சேர்த்து வதக்கவும். புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்து ஊற்றவும். பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.நார்த்தங்காயுடன் சேர்த்து வதக்கலாம். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் மற்றும் பொடித்த எள் சேர்த்து நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

பயன்கள் 

  எந்த வகை உணவையும் நார்த்தங்காய் ஜீரணிக்க உதவுகிறது.பச்சைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது. புகையிலை, புகை பிடிப்பவர்களின் நஞ்சினை நார்த்தங்காய் முறிக்கும். ஆரோக்கியம் தரும் இயற்கையான உணவு.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url