‘நடிகை ஆஸ்னா சவேரியுடன் காதலா?’’ நடிகர் சந்தானம் மனம்திறக்கிறார்

                                       

                                                                                                                                                              நடிகர் சந்தானமும்,  நடிகை ஆஸ்னா சவேரியும் தொடர்ந்து 2 படங்களில் ஜோடியாக நடிப்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு சந்தானம் பதில் அளித்தார்.நகைச்சுவை நடிகர் சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஸ்னா சவேரி நடித்தார். அதைத்தொடர்ந்து, ‘இனிமே இப்படித்தான்’ என்ற புதிய படத்திலும் சந்தானம் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக ஆஸ்னா சவேரி நடித்துள்ளார்.

தொடர்ந்து 2 படங்களில் சந்தானமும், ஆஸ்னா சவேரியும் ஜோடியாக நடித்திருப்பதால், இரண்டு பேரை இணைத்தும் ‘கிசுகிசு’ பரவியிருக்கிறது. இதுபற்றி சந்தானத்திடம் கேட்டபோது  அதற்கு பதில் அளித்து சந்தானம் கூறியதாவது:
                                                                 


                              ‘‘நானும், ஆஸ்னா சவேரியும் இரண்டாவது படத்திலும் ஜோடி சேர்ந்ததுமே இப்படி கிசுகிசு வரும் என்று எதிர்பார்த்தேன். இந்த படத்தில், ஆஸ்னா சவேரி மட்டுமல்ல, அகிலா கிஷோர் என்று இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். எனக்கு அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கிறது.

அதற்கிடையில், காதலிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? நான் நடிக்கிற படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களில் கூட கலந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை. நானும், என் மனைவியும் பிரிந்து விட்டதாக கூட கிசுகிசு வந்தது. அந்த கிசுகிசு வந்தபோது நானும், என் மனைவியும் சாய்பாபா கோவிலில் இருந்தோம். கிசுகிசுவை படித்துவிட்டு, என் மனைவி சிரித்தாள்.’’என்று பதில் அளித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url