Type Here to Get Search Results !

ஷம்கீர் செஸ் முதல் சுற்று: ஆனந்த் - கார்ல்ஸென் மோதல்














                            ஆஸர்பெய்ஜான் நாட்டின் மறைந்த செஸ் வீரர் உகர் கேஷிமோவ் நினைவாக நடைபெறும் ஷம்கீர் செஸ் தொடரின் முதல் சுற்றில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்ஸென் மோதவுள்ளனர்.

ஆஸர்பெய்ஜான் நாட்டின் ஷம்கீர் நகரில், ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டியில் பத்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். முதல் சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடவுள்ளார். கடைசியாக கிரென்கே செஸ் தொடரில் நார்வேயின் கார்ல்ùஸனுடன் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடியபோது தோல்வியடைந்தார். அதே தவறை இந்த முறை செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆனந்த், இந்த போட்டியில் மொத்தம் ஐந்து முறை வெள்ளை நிற காய்களுடன் ஆடவுள்ளார். இதில் அவர் சிறப்பாக செயல்பட்டு 2800 எலோ ரேட்டிங் கிளப்பில் இணையக் காத்திருக்கிறார்.

முதல் சுற்று குறித்து கார்ல்ùஸன் கூறுகையில், "மீண்டும் இங்கு செஸ் ஆட இருப்பது மகிழ்ச்சி. முதல் தொடர் அற்புதமாக நடத்தப்பட்டது. செஸ் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர். இந்தத் தொடரில் ஐந்து முறை கருப்பு நிறக் காய்களுடன் ஆட உள்ளேன். அதிலும், முதல் ஆட்டத்தில் கருப்பு நிறக் காய்களுடன் ஆனந்தை எதிர்கொள்வது சவாலானது' என்றார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad