Type Here to Get Search Results !

ஃபெடரேஷன் கோப்பை: இந்தியா மீண்டும் வெற்றி








                             ஃபெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசினியா குரூப் -2 பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

ஹைதராபாதில் நடைபெற்று வரும் இப்போட்டியில், சானியா மிர்ஸா தலைமையிலான இந்திய அணி துர்க்மெனிஸ்தானை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டது.

இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எதிரணியின் அனஸ்டஃபியா ரென்கோவை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரார்த்தனா தாம்ப்ரே, துர்க்மெனிஸ்தானின் ஜஹானா பேரமோவாவை 6-0, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

இதனால் இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.

தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad