Type Here to Get Search Results !

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்






                     பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தமிம் இக்பால், மிஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் சதம் அடித்து உதவ, வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் வங்கதேசத்தின் டாக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட் செய்த வங்கதேசம் ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. செளமியா சர்க்கார் 20, மகமதுல்லா 5 ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது வங்கதேசம். ஆனால், கடைசி 30 ஓவர்களில் 262 ரன்கள் விளாசியது. மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த முஷ்ஃபிகுர் ரஹீம் (106 ரன்கள்), தொடக்க வீரர் தமிம் இக்பால் (132 ரன்கள்) ஜோடி, 178 ரன்கள் சேர்த்தது. இதுவே மூன்றாவது விக்கெட்டுக்கு அந்த அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப். வங்கதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்தது. இதுவே ஒரு நாள் அரங்கில் அந்த அணி பதிவு செய்யும் அதிகபட்ச ஸ்கோர். பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சயீத் அஜ்மல் 10 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 74 ரன்களை விட்டுக் கொடுத்தார்.


அடுத்து தனது இன்னிங்û தொடங்கிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அஸார் அலி 72 ரன்களும், முகமது ரிஸ்வான் 67 ரன்களும், ஹாரிஸ் சோஹைல் 51 ரன்களும் அடித்தனர். வங்கதேசம் தரப்பில் அராஃபத் சன்னி, டஸ்கின் அஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஷ்ஃபிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad