யாரும் லவ் லெட்டரே கொடுத்ததில்லை! தீக்ஷிதா வருத்தம்
சமீபத்தில் வெளியான ‘நகர்வலம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர், தீக்ஷிதா. சென்னைப் பெண். பேச ஆரம்பித்தால், அருவி மாதிரி பொளந்துக் கட்டுகிறார். “சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா மாணிக்கம், பிசினஸ்மேன். அம்மா ஷீலா, ஹவுஸ் ஒய்ஃப். ரெண்டு அக்கா. யாரும் சினிமாவில் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்துல இருந்து வந்த எனக்கு, எப்படி சினிமா ஆர்வம் ஏற்பட்டதுன்னு தெரியல. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு முடிச்சேன். வேலைக்கு போகணும்னு தோணல. மாடலிங் பண்ணப் போறேன்னு சொன்னேன். யாரும் பெரிசா எதிர்க்கல. அம்மா ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.
புடவை, நகை, கமர்ஷியல் விளம்பரங்கள்னு நிறைய பண்ணேன். ஆனா, திடீர்னு ஒருநாள், நான் சினிமாவில் நடிக்கப் போறேன்னு வீட்ல சொன்னேன். அவ்வளவுதான், எல்லாரும் கொதிச்சு எழுந்துட்டாங்க. அதுவும் ஆபீஸ் போயிட்டு வர்ற மாதிரி ஒரு வேலைதான்னு சொல்லி, எல்லாரையும் சமாதானப்படுத்தினேன். அதுக்கு பிறகு பெர்மிஷன் கொடுத்தாங்க. 2012ல் நடந்த ‘மிஸ்.சவுத் இண்டியா’ போட்டியில் கலந்துக்கிட்டேன். பைனல் வரைக்கும் வந்தேன். நான் பண்ண விளம்பரத்தை பார்த்து, ‘நகர்வலம்’ படத்துல ஹீரோயினா நடிக்க டைரக்டர் மார்க்ஸ் செலக்ட் பண்ணார். அதுக்கு
முன்னாடி ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘ஆகம்’ படங்கள்ல நடிச்சிருந்தேன். இப்ப புதுப்படங்கள்ல நடிக்க பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டிருக்கு. சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்ல, ஜாலியான துறுதுறு பெண்ணா நடிக்க ஆர்வம்.
கண்டிப்பா கிளாமர் பண்ண மாட்டேன். அதுக்கான அவசியம் எனக்கு கிடையாது. நல்ல கேரக்டர் வந்தா தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் நஸ்ரியா நாசிம் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். எந்த விஷயமா இருந்தாலும், முதல்ல அவகிட்டதான் சொல்வேன். தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, நயன்தாராவை எனக்கு இன்ஸ்பிரேஷனா நினைக்கிறேன்” என்ற தீக்ஷிதா, இதுவரை தனக்கு யாரும் லவ் லெட்டர் கொடுத்ததில்லை, தானும் யாரையும் காதலித்ததில்லை என்று கையிலடித்து சத்தியம் செய்கிறார். “கடைசிவரைக்கும் சினிமாவில் நடிக்கணும். அப்படியே காஸ்ட்யூம் டிசைனராவும் ஒர்க் பண்ணணும். நான் பண்ண விளம்பரங்கள்ல, நான்தான் காஸ்ட்யூம் டிசைனர்” என்றார், இந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்.