திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமல்ஹாசனின் அண்ணன்.. சுஹாசினி வெளியிட்ட பதிவு

 நடிகர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன் தீபாவளிக்கு முந்தைய நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தியை அவருடைய மகள் சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பி தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமையை காட்டி கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சின்ன வயதிலிருந்தே அவருடைய அண்ணன் சாருக்ஹாசன் மற்றும் அவருடைய மனைவி தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் சாருஹாசனுடன் மருத்துவமனையில் அவர் மகள் சுஹாசினி மணிரத்தினம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சாருக்ஹாசன் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை சுஹாசினி வெளியிட்டார்.

அதை தொடர்ந்து சில நாட்களிலேயே தனது அப்பாவான சாருஹாசனின் 93 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அப்போது சாருஹாசன் அவருடைய மனைவியோடு பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென எங்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url