நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சீரியல் இதுதானாம்!

 நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நயன்தாராவுக்கு பிடித்த சீரியல் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அதன்படி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி செய்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஃபுல் பார்மோடு தொடங்கினார்.

இந்நிலையில் அவருக்கு பிடித்த சீரியல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல்தான் நயனுக்கு ரொம்பவே பிடித்த சீரியலாம். ஒரு எபிசோடைக்கூட விடாமல் பார்க்கும் அவர் அந்த சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் நடிப்பையும் வெகுவாக ரசிப்பாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட இனி நாமும் கயல் சீரியலை பார்க்க வேண்டியதுதான் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url