சிம்புவை கைவிட்ட கமலஹாசன் நிறுவனம்!.. களத்தில் குதித்த சிம்பு ......

 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த படம் ’எஸ்டிஆர் 48’. இதுகுறித்த தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சிம்புவே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதால், சிம்பு அவரே தயாரிக்க முன்வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url