வருகிறதா ரஜினியின் ‘வேட்டையன் 2’? தி.ஜ.ஞானவேல் சொன்ன செய்தி!

 அக்டோபர் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கிய ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஆன இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது, இருப்பினும், ரஜினிகாந்தின் ரசிகர்களை இந்த படம் திருப்திபடுத்தியது.

சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட் ஒன்றில் டி.ஜே.ஞானவேல் வேட்டையனுக்கு முன்னுரையை(பர்ஸ்ட் பார்ட்-ரிலீஸ் ஆன படத்தின் முன்பு நடக்கும் கதை) உருவாக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார். அதியனின் (ரஜினிகாந்த்) வாழ்க்கை மற்றும் அவர் எப்படி ''என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்'' ஆனார் என்பதை ஆராய விரும்புவதாகவும், மேலும் ஃபஹத் பாசிலின் திருடனாக இருந்து போலீஸ் தகவலாளராக மாறியது குறித்தும் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

படத்தில் மனித உரிமை ஆர்வலர்களாக அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ராணா டகுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம்தான் அமிதாப் பச்சன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான படம் என்பது குறிப்பிடப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url