மீரா மிதுனை விளாசிய பிக் பாஸ் ஆர்த்தி !!!!!



மீரா மிதுன் கடந்த சில தினங்களாகவே நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை வம்புக்கு இழுத்து வருகிறார். அவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து பேசி வருகிறார். அதற்கு ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் மீரா மிதுனைஅவர்கள் தொடர்ந்து வறுத்து எடுத்து வருகிறார்கள். ஆனாலும் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

அது மட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் பற்றி மிகவும் தரக்குறைவாக மீரா மிதுன் பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமன்றி பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.



இது பற்றி பேசி இருக்கும் பிக்பாஸ் புகழ் காமெடி நடிகை ஆர்த்தி "மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா, நடிகையாக இருப்பினும் ஜோ..தீ. என்று எல்லா மக்களுக்கும் தெரியும்... தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது...வன்மையாக கண்டிக்கிறேன் பெண் இனத்தின் வெட்கக்கேடு இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா??" என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆர்த்தி இப்படி பதிவிட்டு இருப்பதற்கு "அது என்ன நடிகையாக இருப்பினும்!(?)" என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அவர் "சிலர் நடிகை என்ற போர்வையை வேறு விதமாக உபயோகப்படுத்துகிறார்கள் உதாரணம் உனக்கு தெரியும் தம்பி" என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் நேற்று விஜய்க்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "விஜய் சார் nepotism product என சொல்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எஸ்.ஏ.சி சார் மூலமாக அவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு சுலபமாக கிடைத்திருக்கலாம், ஆனால் அவர் முதல் வெற்றியை பெறுவதற்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டி இருந்தது. முதல் படத்திலேயே 'இவர் எல்லாம் ஒரு நடிகரா..' என கூறி நெகட்டிவாக மீடியா உள்ளிட்ட பலரும் பேசினார்கள். ஆனால் அது எதையும் கண்டுகொள்ளாமல், அவர் தொடர்ந்து படம் நடித்து தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பால் அனைவரது மனதையும் கவர்ந்தவர். இப்போ வரைக்கும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவங்களுக்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் படங்களில் அவரது நடிப்பு பர்ப்பாமென்ஸ் தான்" என சனம் ஷெட்டி கூறி இருக்கிறார்.

மேலும் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் தீனா பதிவிட்டுள்ள ட்விட்டில் "ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே.....I MEAN STREET DOGS Dog" என மறைமுகமாக மீராவை தாக்கி பேசி இருக்கிறார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். பட்டுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நகர ஒன்றியத் தலைவர் இந்த புகாரை அளித்திருக்கிறார்.

தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகளால் பேசிய மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறி இருக்கிறார்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url