Type Here to Get Search Results !

முழுமையான புரதம் மற்றும் முழுமையற்ற புரதங்களை பற்றி ஒரு விரிவான விளக்கம் !!!!



நம் உடல்கள் திறமையாக செயல்பட ஒரு நாளில் போதுமான அளவு புரதத்தை சாப்பிடுவது அவசியம். ஏனெனில் புரதங்கள் தான் எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு, தோல் மற்றும் இரத்தத்தின் கட்டுமானத்தை உருவாக்குகிறது. ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளும் போது புரத உணவுகளின் தான் கவனம் செலுத்துவோம்.

புரத வகைகள்:

புரதத்தின் தரம் முக்கியமானது என்பதை நாம் மறந்து விடுகிறோம். புரதம் இரண்டு வகைப்படும். 1. முழுமையானது 2.முழுமையற்றது. அனைத்து வகையான புரதங்களும் அவற்றின் வேதியியல் கட்டமைப்பின் படி பிரிக்கப்படுகிறது. இந்த மேக்ரோ உணவை உங்க டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள்:

புரதம் பல்வேறு வகையான அமினோ அமிலங்களால் ஆனது. இந்த அமினோ அமிலங்களில் கரிம சேர்மங்கள் அதிகளவில் உள்ளன. இந்த சேர்மங்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகிறது. நம் உடலுக்கு தேவைப்படும் 20 வகையான அமினோ அமிலங்கள் இதில் காணப்படுகின்றன. இவற்றில் 11 அத்தியாவசியமானவை.

மீதமுள்ள 9 அமினோ அமிலங்கள் நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு அமினோ அமிலத்திற்கும் வேறுபட்ட பண்புகள் உள்ளன. எனவே இந்த புரதங்கள் இல்லாமல் இருப்பது உங்களுக்கு மனச்சோர்வு, குறைந்த நோயெதிரிப்பு சக்தி போன்ற சுகாதார பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

​முழுமையான புரதம்:



புரதத்தின் முழுமையான ஆதாரம் இது 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட 9 அமினோ அமிலங்களை கொண்டிருப்பதால் புரதத்தின் முழுமையான ஆதாரமாக கருதப்படுகிறது.

கோழி, மீன், முட்டை, பால் மற்றும் கடல் உணவுகள் போன்றவை முழுமையான புரதங்கள் ஆகும். இருப்பினும் இதில் சில தாவர வகையிலான உணவுப் பொருட்களும் இதில் அடங்கும். குயினோவா, பாப்பரை மற்றும் சோயா ஆகியவை முழுமையான புரதத்தின் தாவர மூலங்களாக உள்ளது.

வெறும் இஞ்சி தண்ணீரை குடிச்சு 25 கிலோ எடை குறைஞ்சிருக்காங்க... எப்படி குடிச்சாங்கனு பாருங்க...

​முழுமையற்ற புரதங்கள்:



முழுமையற்ற புரதங்கள் என்பது தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களை முழுமையற்ற புரதங்களாக வகைப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் அவற்றில் 1 அல்லது 2 அமினோ அமிலங்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது குறைந்த அளவில் காணப்படலாம். அரிசி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்றவை முழுமையற்ற புரதத்தின் ஆதாரமாகும்.

​அமினோ அமிலங்களை எவ்வாறு பெறுவது:

நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் இறைச்சி, பால், மீன் மற்றும் முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இருப்பினும் நீங்கள் உணவுப் பொருட்களை உட்கொள்ளாவிட்டால் 9 அமினோ அமிலங்களையும் பெற வெவ்வேறு புரதங்களின் கலவையை சாப்பிடுங்கள்.

நம் உடலில் கார்ப்ஸ் சத்தை போன்று புரதத்தை சேமிக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாளும் தேவையான அளவு புரதத்தை சாப்பிட வேண்டும். 75 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினமும் சுமார் 60 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

முழுமை புரத உணவுகள்:

முழுமையான புரதத்திற்கு ஆதாரமாக சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*கோழி
*முட்டை
*பால்
*சீஸ்
*தயிர்
*மீன்
*டோஃபு
*குயினோவா
*பக்வீட்
*அரிசி மற்றும் பீன்ஸ்
*ஹம்மஸ் மற்றும் ரொட்டி
*முழு தானிய ரொட்டியுடன் வேர்க்கடலை *வெண்ணெய், சாண்ட்விட்ச்
*பாதாம் பாலுடன் தானியம்
*வேர்க்கடலை மற்றும் சூரிய காந்தி அல்லது பூசணி விதைகள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad