Type Here to Get Search Results !

இதுவரை நீங்கள் அமெரிக்காவை பற்றி கேட்டிராத 15 உண்மைகள் !!!



உண்மையில் அமெரிக்கா பல மாகாணங்கள் அடங்கிய பெரும் மாகாணம் ஆகும். அப்படியான அமெரிக்காவை பற்றிய விசித்திரமான யாரும் அதிகம் அறிந்திராத சில தகவல்கள் உள்ளன. அப்படியான 15 தகவல்களை தான் நாம் பார்க்க போகிறோம்.

01.அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ மொழி கிடையாது:

ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அமெரிக்க கொடி பறப்பதை காணும்போது மகிழ்ச்சியடைகின்றனர். அமெரிக்காவில் அதிகப்படியான மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். திரைப்படங்களும் பொதுவாக ஆங்கிலத்தில் தான் வெளிவருகிறது.

ஆனால் அதே அமெரிக்காவில் பெரும்பகுதி மக்கள் ஸ்பானிஷ் மொழியை பேசுகின்றனர். இப்படியாக பல மொழிகளை பேசும் நாடாக அமெரிக்கா உள்ளதால் அமெரிக்காவுக்கென்று தனிப்பட்ட அதிகார மொழி கிடையாது. மொத்தமாக அமெரிக்காவில் 350க்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

02.மெக்டொனால்ட் பணியாளர்கள்:

அமெரிக்காவை பொறுத்தவரை அங்குள்ள மக்களில் எட்டில் ஒருவர் மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரிகின்றனர். மெக்டொனால்ட் உலகில் அதிகமாக துரித உணவு விற்கும் நிறுவனம் கிடையாதுதான். ஆனால் அது அமெரிக்காவின் புகழ்பெற்ற நிறுவனமாகும்.

உயர் பள்ளியில் பயிலும் குழந்தைகள் முதல் வெளியே வேலை செய்யும் பெற்றோர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தாத்தாக்கள் வரை அனைவரும் உணவுகளை விரும்பி உண்ணும் ஒரு இடமாக மெக்டோனால்ட் உள்ளது.

மெக்டோனால்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிதாக 1 மில்லியன் நபர்களை வேலைக்கு எடுக்கிறதாம்.

03.ரஷ்யா அலாஸ்காவை அமெரிக்காவிற்கு 2 காசுக்கு விற்றதாம்:

அனைவரும் பேரம் பேசி பொருட்களை வாங்குவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏன் நாமே காய்கறி கடைகளிலும் பல இடங்களிலும் பேரம் பேசி இருப்போம்.

ஆனால் ஒரு நாட்டையே பேரம் பேசி வாங்கிய கதைகள் தெரியுமா? ரஷ்யா நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று அலாஸ்கா அந்த மாநிலத்தை அமெரிக்கா வாங்குவதற்கு பேரம் பேசியது. கடைசியாக ஒரு ஏக்கருக்கு 2 பைசா என்று ரஷ்யா அலாஸ்காவை மொத்தம் 7.2 மில்லியனுக்கும் மலிவான விலைக்கு விற்றது.

ஆனால் அடுத்த 50 ஆண்டுகளில் விற்ற பணத்தை விட 100 மடங்கு அதிகமாக சம்பாதித்தது அமெரிக்கா. பாவம் அப்போது அந்த நிலத்தில் தங்கம் இருந்தது ரஷ்யாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

04. பொதுவான நடைமுறையை பின்பற்றாத மாகணங்கள்:

அரிசோனாவும் ஹாவாயும் அமெரிக்காவின் டே லைட் சேவிங் என்னும் நேர கணக்கை பின்பற்றுவதில்லை.

அமெரிக்காவின் கோடைக்காலங்களில் பயன்படுத்தப்படும் நேர முறைதான் டே லைட் சேவிங். இந்த முறையை பொதுவாக அமெரிக்க அரசின் கீழ் உள்ள அனைத்து மாகாணங்களும் பின்பற்றுகின்றன. ஆனால் அரிசோனாவும் ஹவாயும் அவற்றை பின்பற்றுவதில்லை.

பொதுவாக அங்கு வாழ்கிற விவசாயிகள் இந்த முறையை பின்பற்றுவதாக கூறினாலும் உண்மையில் அவர்கள் அந்த நேர கணக்கை பின்பற்றுவதில்லை.

05.பசுக்கள் மனிதர்களை விட அதிகம்:

பசுக்கள் மனிதர்களுக்கு எதிராக எந்த கலகமும் செய்யாதவரை அமெரிக்காவில் உள்ள மொன்டாவில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் மொன்டாவில் உள்ள மொத்த மக்கள்தொகையை விட பசுக்களின் எண்ணிக்கை அங்கே அதிகம்.

மொன்டா மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ள முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இதனால் மற்ற பகுதிகளை விட இங்கு கால்நடைகள் மூன்றில் இரண்டு பங்கு அதிகமாக உள்ளன. மொன்டாவில் மொத்தமாக 2.6 மில்லியன் கால்நடைகள் உள்ளதாக கூறப்படுகின்றன. ஆனால் அங்கு வாழும் மொத்த மனிதர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கு சற்று கூடுதலே ஆகும்.

06.கல்லூரி விளையாட்டு வீரர்கள்:

நம்மில் சிலர் கல்லூரியில் விளையாட்டு வீரராக இருந்திருப்போம். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவமான விஷயமாக பிறருக்கு இருந்திருக்காது.

ஆனால் அமெரிக்காவில் கல்லூரி விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மார்ச் மேட்னஸ் எனும் கூடைப்பந்து போட்டியை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடான ஐரோப்பா கூட கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் கல்லூரி மாணவர்களுக்காக அமெரிக்காவில் நடத்தப்படும் முக்கியமான போட்டி இந்த மார்ச் மேட்னஸ் ஆகும். அதில் வெல்லும் வீரர்கள் வெகுவாக கெளரவிக்கப்படுகிறார்கள். இப்படியாக கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை கெளரவிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.

07.திருமணமாகாத தாய்மார்கள்:

அமெரிக்காவில் பிறக்கும் 40 சதவீத குழந்தைகளின் அம்மாக்கள் திருமணமே செய்துக்கொள்ளாதவர்கள். அவர்கள் சிங்கிள் மதர் என்று அழைக்கப்படுகின்றனர்.

திருமணம் மீது நாட்டமில்லாமல் அதே சமயம் குழந்தை விரும்பியாகவும் இருக்கும் பெண்களும், பெரும் தொழில்கள் செய்யும் சில தொழிலதிபராக இருக்கும் பெண்களும் திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்னும் சிலர் கணவரை விவாகரத்து செய்துவிட்டோ அல்லது வீட்டை விட்டு வந்தோ சிங்கிள் மதராக வாழ்கின்றனர். முன்பெல்லாம் அதிகமாக அமெரிக்காவில் திருமணமாகாத தாய்மார்கள் இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக 40 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாத தாய்மார்கள் இருக்கின்றனர்.

ஆனால் 1940 இல் மொத்தமே 3.8 சதவீதம் மட்டுமே திருமணம் ஆகாத தாய்மார்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1969 வரை 10 சதவீததை தாண்டவில்லை.

08.மூன்றில் ஒருவர் குண்டானவர்:

பி.எம்.ஐ என்னும் உடல் எடையை கணக்கிடும் மதிப்பீட்டின் படி அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் உடல் பருமனாக இருக்கிறார். உடல் பருமன் தொடர்பான நோய்களுக்காக மட்டும் அமெரிக்காவில் வருடத்திற்கு 315 பில்லியன் டாலர்கள் செலவாகின்றன.

இந்த உடல் பருமனானது வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருவேளை அதற்கு அந்த நாட்டின் உணவு கலாச்சாரம் கூட காரணமாக இருக்கலாம்.

09.குழந்தைகள் சிகரெட் பிடிக்கலாம்:

புகை பிடிப்பது என்பது மிகவும் மோசமான ஒரு பழக்கமாகும். வேறு எந்த ஒரு பழக்கமும் பயன்படுத்துபவர் உடலை மட்டுமே பாதிக்கும் ஆனால் புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்து அவர்கள் வெளியிடும் புகை பிடிப்பவரை விட அருகில் உள்ளவரை அதிகமாக பாதிக்கிறது.

இதனால் இந்தியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது குற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் புகைப்பிடிப்பது குற்ற செயல் அல்ல. முக்கியமாக 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்கள் புகைப்பிடிக்க அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவன் புகைப்பிடிப்பது சட்டபூர்வமாக நெவாடாவை தவிர அமெரிக்காவில் மற்ற பகுதிகளில் அங்கிகரிக்கப்பட்ட விஷயமாகும். நெவாடாவில் மட்டும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சிகரெட் வாங்குவது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10.வர்ஜீனியாவில் பிறந்த அதிபர்கள்:

அமெரிக்காவில் உச்சக்கட்ட பதவி என்பது அமெரிக்க அதிபர் ஆவதுதான். அமெரிக்க அதிபரால் ஒட்டு மொத்த அமெரிக்காவையும் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்க ராணுவம், உளவுப்படை அனைத்தும் அவருக்கும் அடிப்பணியும். கெளரவமான அமெரிக்க வெள்ளை மாளிகை அவருக்கு தங்கும் இடமாக வழங்கப்படும்.

ஒருவேளை வர்ஜீனியா அமெரிக்காவின் தலைநகருக்கு அருகில் இருப்பதால் கூட இப்படி நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் அமெரிக்காவில் இதுவரை அதிபர் ஆனவர்களில் எட்டு பேர் வர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தவர்கள்.

அவர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன், ஜேம்ஸ் மன்ரோ, வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஜான் டைலர், சக்கரி டெய்லர் மற்றும் உட்ரோ வில்சன் ஆகியோர் ஆவர்.

11.கடன் இல்லாதவர் பணக்காரர்:

அமெரிக்காவில் நீங்கள் வாழ்ந்து நீங்கள் ஒரு கடனாளியாக இல்லாமல் இருந்தால் உண்மையில் அனைத்து அமெரிக்க குடிமகனை விடவும் நீங்கள் 15 சதவீதம் அதிக செல்வந்தர் என அர்த்தம்.

அமெரிக்காவில் ஒருவர் தன்னிடம் இல்லாத பொருட்களை வாங்குவதற்கு எப்போதும் இ.எம்.ஐ எனப்படும் கடன் முறையையே கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் மாணவர் கடன், கிரெடிட் கார்டு கடன், மருத்துவ கடன், அடமானங்கள், கார் கடன்கள் என அமெரிக்க மக்கள் ஏதாவது ஒரு கடனை பெற்றே வாழ்வை நடத்தி வருகின்றனர்.

12.4.4 ஆண்டுகளே வேலை பார்ப்பவர்கள்:

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒரு வேலையை அதிகப்பட்சமாக நாலறை ஆண்டுகள் மட்டுமே பார்க்கிறார்கள்.

ஒரே நிறுவனத்தில் வேலையில் அதிக காலம் இருந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பது சாதரணமாக மக்களின் மனநிலை ஆகும். ஆனால் அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் தரும் மற்றொரு நிறுவனம் கிடைக்கும்போது அவர்கள் வேலையை விட்டு விட்டு அதிக சம்பளம் தரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். அல்லது அப்படியான நிறுவனத்தை தேடிக்கொண்டு தனது வேலையை விட்டு விடுகின்றனர்.

18 முதல் 42 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான அமெரிக்கர்கள் அந்த குறிப்பிட்ட வயதிற்குள் 10 நிறுவனங்களுக்கு வேலைக்கு மாறி உள்ளனர்.

13.வாடகை அதிகமாக உள்ள நகரங்கள்:

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 40 மாநிலத்தை விட அதிகமான மக்கள் நியூயார்க் மாநகரத்தில் வாழ்கின்றனர். புவியியல் ரீதியாக பார்த்தோம் என்றால் சென்னை போலவே நியூயார்க் நகரமும் சிறியதாகதான் உள்ளது.

ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அளவு 8.5 மில்லியன் ஆகும். மற்ற 40 மாநிலங்களை விட இது மிகவும் அதிகமான மக்கள்த்தொகை ஆகும். இதனால் ஜன நெரிசல் அதிகமாக உள்ள நகரமாக நியூயார்க் உள்ளது. இதனால் இங்கு வீட்டு வாடகையும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

14.கோதுமை களஞ்சியமான மாநிலம்:

அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணம் உலகில் அதிகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. ஒருவேளை கான்சாஸில் உள்ள கோதுமையை கொண்டு உலகம் முழுவதும் உணவளிக்க முடிந்தால் உலக மக்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு உணவளிக்க முடியும்.

இதை வைத்தே கான்சாஸ் எவ்வளவு பெரியது என்றும் அமெரிக்கர்கள் விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

15.போக்குவரத்தில் அசத்தும் நாடு:

நமது நாட்டில் நீண்ட நேரம் வானத்தை பார்த்தோம் என்றால் திடீர் என ஒரு விமானம் போவதை நாம் பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவில் வானம் கூட ட்ராஃபிக் ஜாம் ஆக வாய்ப்பு ஏற்படும் போல

ஏனெனில் அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் எப்போதும் ஆகாயத்தில் 5000 விமானங்கள் பறந்துகொண்டே உள்ளன. இவை அனைத்தும் வணிக விமானங்கள். இதற்காக பல ஊழியர்கள் வேலை பார்ப்பதால் விமானங்கள் சரியான பாதையில் செல்கின்றன.

இதனால் 5000 விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்தாலும் விமான பயணம் அங்கு பாதுக்காப்பான ஒன்றாகவே உள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad