Type Here to Get Search Results !

க்ரீன் டீ ல பாடி ஸ்கிரப் பண்ணலாமா??? வாங்க எப்படி சுலபமா வீட்லேயே பண்ணலாம்னு பாக்கலாம் !!!!



க்ரீன் டீ நம்முடைய உடலில் மட்டுமல்லாமல் சருமத்திலும் பல அற்புதங்களைச் செய்யக் கூடியது. அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு சருமத்தைப் புத்துணர்ச்சியோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது. நம்முடைய சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஆற்றல் கொண்டது.

க்ரீன் நன்மைகள்

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-இன்ப்ளமேட்ரி பண்புகள் நம்முடைய முகத்தில் ஏற்படும் ரேசஸ், தடிப்புகள், சரும வீக்கம் ஆகியவற்றை நீக்கும் தன்மை கொண்டது. அதனால் தினமும் கூட க்ரீன் டீயை சருமத்தில் அப்ளை செய்யலாம் என்று சரும நோய் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த க்ரீன் டீயை வைத்து எப்படி நம்முடைய சருமத்தைப் பாதுகாக்கும் பாடி ஸ்கிரப் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

க்ரீன் டீ பாடி ஸ்கிரப்



தேவையான பொருள்கள்

கால் கப் சர்க்கரை
4 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
க்ரீன் டீ இலைகள்
1-2 க்ரீன் டீ பேக்குகள்

செய்முறை

முதலில் ஒரு பௌலில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நம்முடைய சருமத்துக்கு நல்ல ஸ்கிரப்பாக செயல்பட்டு, நல்ல மாய்ச்சரைஸராகவும் இருக்கிறது.

சர்க்கரையுடன் சிறிது சிறிதாக ஆலிவ் ஆயிலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆன்டி-ஆக்சிடண்ட்டு நிறைந்ததால் இளமையாக வைத்திருக்க உதவும்.

தூங்கி எழுவதற்கும் காலை உணவை சாப்பிடுவதற்கும் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும்?
இந்த கலவையோடு ஒரு க்ரீன் டீ பேக் எடுத்து பிரித்து, அதை சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தபின், எடுத்து வைத்திருக்கும் க்ரீன் டீ இலைகளைக் கொண்டு டிக்காஷன் தயார் செய்து அதையும் சிறிது இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை நன்றாகப் பேஸ்ட் போல தயார் செய்து முகம், கை, கழுத்து, கால் ஆகிய பகுதிகளில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யலாம். ஒரு பதினைந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்த பிறகு, நன்கு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். முகம் மற்றும் சருமம் பளிச்சென இருப்பதை உங்களால் நன்கு உணர முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad