தேங்காய் தண்ணீரை வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா??



தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்று தேங்காய்.தேங்காயை உடைக்கும் போது அதனுள் இருக்கும் தண்ணீரை நம்மில் பலரும் கீழே ஊற்றி விடுவோம்.

ஆனால் தேங்காய் தண்ணீரை வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா??

இது இளநீரை போல மிகுந்த சுவையை கொண்டது.இதில் பல வைட்டமின்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்கள்  உட்பட பல கனிமங்களால் நிறைந்தது.

இதில் உங்கள் உடலின் நீரேற்றத்திற்கு தேவையான எலெக்ட்ரோலைட்டுகளான சோடியம் மற்றும் பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது.

இந்த நீரைக் குடித்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம் :

சிறுநீரக நோய்  :



அநேக ஆண்களை ஆட்டிப் படைக்கும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக பிரச்சனை .இந்த பிரச்சனையை எளிய முறையில் போக்க நிறையத் தேங்காய் தண்ணீரைக் குடித்து வந்தால்,சிறுநீரக நோய்த் தொற்றுக்களை போக்க முடியும்.இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு சிறுநீரக கற்களையும் கரைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: 



தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.அதுமட்டுமல்லாமல் காய்ச்சல்,சளி,சிறுநீர்பாதைத் தொற்றுக்கள்,ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்கள்,இருமலை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து வெளியேற்றி விடக்கூடிய சக்தி தேங்காய் நீருக்கு உண்டு.ஆகவே தினமும் தேங்காயை உடைக்கும் பொழுது தவறாமல் தேங்காய் நீரை அருந்த வேண்டும்.

வறட்சி :



வறண்ட சருமம் உடையவர்கள் தினமும் தேங்காய் நீரைக் குடித்து வந்தால் உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு பொலிவான தோற்றத்தைப் பெறலாம்.மேலும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலும் கிடைக்குமாம்.

தைராய்டு:



தைராய்டு பிரச்சனை இருந்தாலே உடலில் சோம்பேறித்தனம் அதிகரிக்குமாம்..இதனைப் போக்க இந்த நீரைக்  குடித்து வந்தாலே உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவி செய்யுமாம்.

செரிமான பிரச்சனை:



தேங்காய்த் தண்ணீரில் நார்ச் சத்து வளமாக நிறைந்திருக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய்த் தண்ணீரை தொடர்ந்து  குடித்து வந்தால்  செரிமான பிரச்சனையை  எளிதாக நீக்கி விடலாம் .மேலும் இதை தொடர்ந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை விலகி விடும்.

ரத்த அழுத்தம்:



உயர் ரத்த அழுதப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் தேங்காய்த் தண்ணீரைக் குடித்து வந்தால் உடலில் இருக்கும் எலெக்ட்ரோலைட்டுகளை சீராக்கி உயர் ரத்த அழுத்ததைக்  கட்டுப்படுத்த முடியும் .

உடல் எடை:



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் தேங்காய் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்புகளை சேர விடாமல் தடுக்கலாம்.இது உடலில் பசியை போக்குகிறது.இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url