மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸ் - அர்ஜூன் தாஸ்

மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸ் - அர்ஜூன் தாஸ்
மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் 6 முறை பாத்திருப்பேன், அந்தளவிற்கு ட்ரெய்லர் மரண மாஸாக உள்ளதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கூறியுள்ளார்.

மாஸ்டர் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அர்ஜுன் தாஸ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.

ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரீலிஸ் ஆகவில்லை. மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் மே 12-ம் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இணையத்தில் நேரலையில் பேசினார். அப்போது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் மாஸ்டர் ட்ரெய்லரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு. ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் அது வெளியாகும்“ என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url